விழுப்புரம் சிறுமி கொலை: சிபிஐ விசாரணை கோரி மனு

விழுப்புரம் சிறுமி கொலை: சிபிஐ விசாரணை கோரி மனு

விழுப்புரம் சிறுமி கொலை: சிபிஐ விசாரணை கோரி மனு
Published on

விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் 15 வயது சிறுமியின் கைகளை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயல் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்படர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் முருகன், கலியபெருமாள் இருவரும் ஆளும் கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்களாக உள்ளதால் தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com