புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு எப்போது?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு எப்போது?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு எப்போது?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Published on

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு எப்போது செலுத்தப்படும் என்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து, ஜாக்டோ- ஜியோ தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆசிரியர்கள் அதிகபட்சமாக 91 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவதாகக் கூறினார். இதைக்கேட்ட நீதிபதி, அரசு ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது என்றும் அவர்கள் போராடும் முறையை மட்டுமே கண்டிப்பதாகவும் கூறினார். முதல்நிலை ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியப் பலன்கள் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என மற்றொரு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது, மற்ற அரசு தரப்பு ஊழியர்களெல்லாம் ஊழியர்கள் இல்லையா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து, ஓய்வூதியம் என்பது கல்வித்துறையை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் நிதித்துறையும் சார்ந்த விஷயம் என்று அரசு வழக்கறிஞர் கூறினார். அதையடுத்து, நிதித்துறை முதன்மை செயலரை வழக்கின் எதிர் மனுதாரராக தானாக முன் வந்து நீதிபதி இணைத்தார்.

பின்னர், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கீடு வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்படவில்லை என்றால் எவ்வளவு காலத்திற்குள் வழங்கப்படும்? என தமிழக அரசு விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? எனவும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com