அதிமுகவில் 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

அதிமுகவில் 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
அதிமுகவில் 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக ஒபிஎஸ் - ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் திருப்பூர் மாநகர் அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.பி சி.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக வைத்தியலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவின் அமைப்பு செயலாளராக எம்.எஸ்.எம் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக கமலக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நூர்ஜஹான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்" 
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com