திருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த பெண்

திருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த பெண்
திருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த பெண்

சேலத்தில் இளம்பெண் ஒருவர், திருமணமான ஒரே மாதத்தில் கணவன் கட்டிய‌ தாலியை கழற்றிவிட்டு ‌காதலனுடன் கைகோர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாராபுரத்தைச் சேர்ந்தவர் பட்டதாரி ரம்யா. இவர் காட்டுவளவைச் சேர்ந்த சிவகுமாரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்திருக்கிறார். இதையறிந்த ரம்யாவின் குடும்பத்தினர், அவசர அவசரமாக உறவினர் அருள்குமாருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. திருமணமாகி ஒரு மாதமான நிலையில், அருள்ராஜ் கட்டிய தாலியை குளியல் அறையில் கழற்றி வைத்து விட்டு ரம்யா தலைமறைவாகிவிட்டார்.

அவரை எங்கே? என தேடியபோது காதலன் சிவகுமார் வீட்டில் ரம்யா தஞ்சமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காதலனுடன் சேர்ந்து சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்குச் சென்ற ரம்யா, தனக்கு ‌கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் அளித்துள்ளார். எனவே அது சட்டப்படி ‌செல்லாது என்றும் கூறியுள்ளார்.‌ 

இதையடுத்து ஓமலூர் காவல்துறையினர் 3 குடும்பத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்நிலையத்தில் கண்ணீர் விட்டு அழுத ரம்யா, இறுதியாக அவரின் விருப்பப்படி கா‌தலன் சிவகுமாருடன் கைகோர்த்தார். ஒரு மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் அருள்குமார் வீடு திரும்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com