சென்னையில் கொட்டித்தீர்த்த மழை... அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை... அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
சென்னையில் கொட்டித்தீர்த்த மழை... அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 34 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அடையாறு, வேளச்சேரி, துரைப்பாக்கம், கோட்டூர்புரம், மந்தவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கிய மலையானது தற்போது அதிக அளவில் கொட்டி தீர்த்து வருகிறது. அதிக இடி மின்னலும் விட்டு விட்டு ஏற்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com