“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on

பவானி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் உடனே கட்டித்தரப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.

வரலாறு காணாத மழையினால் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், தூத்துக்குடி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சிகளின் மூலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. 

கொடியசைத்து துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரூ.2 கோடி மதிப்பிலான குழந்தைகள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் உடைகள், உணவு பொருட்கள், பிரஷ்,பேஸ்ட் என 31 விதமான அத்தியாவசிய பொருட்கள் 21 வாகனங்களில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்பதாகவும், கண்டிப்பாக மீண்டு வரும் என்றும், அதற்கான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து தமிழகம் செய்யும் என்றார்.

தமிழக கேரள எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் நிவாரண பணி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும்படியும், தேவையான மருந்துகளை அனுப்பிவைக்கும்படியும் சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மழையினால் வால்பாறை, பொள்ளாச்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சரி செய்யப்பட்டதுடன், பவானி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் உடனே கட்டித்தரப்படும்  என்றார். மேலும் தொடர்ந்து பாதிப்புகளை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com