\
புதுச்சேரிக்கு புதிய ஆளுநரா? விளக்கம் அளித்த கிரண்பேடி!

புதுச்சேரிக்கு புதிய ஆளுநரா? விளக்கம் அளித்த கிரண்பேடி!

புதுச்சேரிக்கு புதிய ஆளுநரா? விளக்கம் அளித்த கிரண்பேடி!
Published on

தமிழக பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை எம்பியுமான இல. கணேசன், புதுச்சேரியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும் கிரண்பேடி மத்திய அமைச்சராகிறார் என்றும் பரவியது. இதனை கிரண்பேடி மறுத்துள்ளார்.

கூடுதல் பொறுப்பாக கொரோனா தடுப்புப் பணிகள் அவருக்கு வழங்கப்படும் என்று அந்த தகவலில் தெரிவித்துள்ளதையும் தவறானது எனக் கூறியுள்ளார்.   

இதுபோன்ற தவறான செய்திகள் எனக்கு வருகின்றன். தயவுசெய்து பொய்யான வீண் வதந்திகளைப் பரப்பாதீர்கள் என்றும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்றும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.    

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com