நீலகிரி வனப்பகுதிகளில் உருவான புதிய கண்கவர் அருவிகள்!

நீலகிரி வனப்பகுதிகளில் உருவான புதிய கண்கவர் அருவிகள்!

நீலகிரி வனப்பகுதிகளில் உருவான புதிய கண்கவர் அருவிகள்!
Published on

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பெய்துவரும் மழையால், புதிய அருவிகள் உருவாகி காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன.

நீலகிரி மாவட்டம் பரளியார், மரப்பாலம் உள்ளிட்டப் பகுதிகளில் தொடர்மழை காரணமாக குன்னூர் மேட்டுபாளையம் ரயில்பாதையில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இதேபோன்று குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஹில்குரோவ் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அருவி பாய்ந்து வருவது இப்பகுதியில் ரயிலில் பயணிப்போருக்கு அச்சம் கலந்த மகிழச்சியைத் தருகிறது.

மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையின் ஓரத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் புதிய அருவிகள் தோன்றியுள்ளன. இந்த அருவிகள் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும் பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் காட்சித் தருவது இவ்வழியாக பயணிப்போருக்கு மகிழ்ச்சியை தருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com