சிட்டு குருவிகளின் வாழ்விடத்தை அதிகரிக்க புதிய முயற்சி

சிட்டு குருவிகளின் வாழ்விடத்தை அதிகரிக்க புதிய முயற்சி

சிட்டு குருவிகளின் வாழ்விடத்தை அதிகரிக்க புதிய முயற்சி
Published on

கோவையில் சிட்டு குருவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் வாழ்விடத்தை அதிகரிக்க கோவை மாநகராட்சி முழுவதிலும் 3000 சிட்டு குருவி கூடுகள் வைத்துள்ளனர். 

கோவை மாநகராட்சிகளில் எந்தெந்த இடங்களில் எல்லாம் சிட்டு குருவிகள் காணப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். அதன் படி அந்தந்த இடங்களில் மக்களின் பங்களிப்போடு அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட சிட்டுகுருவிக் கூடுகள் பொருத்தப்பட உள்ளது. அதன் முதற்கட்டமாக கோவை மாநகரம் முழுவதும் 3 ஆயிரம் கூடுகள் வைக்க திட்டமிட்டு அவற்றிற்கு கூடுகள் அமைத்து கொடுக்கும் வகையிலான புதிய திட்டத்தை மாநகராட்சியுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள்  இன்று துவக்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்களில் கூடுகள் வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சி  ஆணையாளர் விஜயகார்த்திக்கேயன் தனது அலுவலகத்தில் கூடுகளை பொறுத்தினார். அந்தக் கூடுகளை கண்காணிக்கவும், அதனை பாதுகாக்கவும், ஆய்வு மேற்கொள்வது ஆகிய பணிகளில் ஆராய்ச்சி மாணவர்கள்  ஈடுபட உள்ளனர்.

பொதுமக்கள் சிட்டு குருவிகள் இருக்கும் இடம் அறிந்தால் அங்கு கூடுகள் வைக்க இலவச கூடுகளை வாங்கி கொள்ளலாம் என மாநகராட்சி  ஆணையாளர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக தகவல் அறிய 9943320303 என்ற எண்ணை தொடர்ப்புகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com