நீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளித்த புதும‌ணத்தம்பதி 

நீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளித்த புதும‌ணத்தம்பதி 
நீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளித்த புதும‌ணத்தம்பதி 

நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக, புதுமணத் தம்பதியர் மணமேடையில் வைத்து உதவித்தொகை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது. 

கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் - கார்த்திகா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, நீர் நிலைகளை தூர்வாரும் பணிக்கு தங்கள் பங்களிப்பாக இளைஞர் அமைப்பிற்கு 6 ஆயிரம் ரூபாயை மணமேடையிலேயே வழங்கினர். ஏற்கனவே ராஜம்மாள் என்ற மூதாட்டி, தூர்வாரும் பணிக்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்கியருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com