“தமிழில் தகவல் பரிமாறுவதை தவிர்க்கவும்”- தெற்கு ரயில்வேயின் புதிய சர்ச்சை..!

“தமிழில் தகவல் பரிமாறுவதை தவிர்க்கவும்”- தெற்கு ரயில்வேயின் புதிய சர்ச்சை..!

“தமிழில் தகவல் பரிமாறுவதை தவிர்க்கவும்”- தெற்கு ரயில்வேயின் புதிய சர்ச்சை..!
Published on

தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழ்) இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கிலத்திலே தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த ஆணை புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com