தமிழ்நாடு
காவல்நிலையத்தில் புகார் அளிக்க புதியமுறை அறிமுகம்
காவல்நிலையத்தில் புகார் அளிக்க புதியமுறை அறிமுகம்
காவல்நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுமதிச்சீட்டு வழங்கும் திட்டத்தை சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்.
தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரு புதியமுறையை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். அந்த முறைப்படி, காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முறையால், இனி காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்களின் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு, புகைப்படம் மற்றும் க்யூஆர் கோடு உள்ளடங்கிய அனுமதி சீட்டு உடனுக்குடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.