புதிய பேருந்துகள்
புதிய பேருந்துகள்pt desk

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள்!

அரசு போக்குவரத்துக்குக் கழகங்களுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published on

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதன்படி 2024 - 25ஆம் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய 1,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 503 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி நிர்ணய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Govt Buses
Govt Busespt desk

மேலும் 2,544 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு மொத்தம் 2,166 BS-VI தர டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 552 தாழ்தளப் பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு 59 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

புதிய பேருந்துகள்
திருச்சி | கண்ணூத்து கிராமத்தில் கால்பதித்த BSNL.. மகிழ்ச்சியில் கிராம மக்கள்...

மீதமுள்ள 493 பேருந்துகள் வரும் நவம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். உலக வங்கி உதவியுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 500 மின்சார பேருந்துகள் இயக்க விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது. கடந்த 23ஆம் தேதி வரை 3,071 புதிய பேருந்துகளுக்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com