
தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தஞ்சை அரசு மருத்துவமனையில் குணசேகரன் - ராஜலட்சுமி தம்பதிக்கு பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை அவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி கட்டைப்பையில் வைத்துக் கடத்திச் சென்றார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. மேலும் அந்த பெண் ஆட்டோவில் ஏறிச்சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து குழந்தையை தேடிவந்தனர். இரண்டு நாட்களாக நடந்த விசாரணையில் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட பெண்குழந்தையை பட்டுக்கோட்டையில் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.