பிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தை..!
கிருஷ்ணகிரி அருகே பிறந்து சில மணி நேரங்களிலேயே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கோரிப்பாளையம் என்ற இடத்தில் ஆற்றங்கரையோரம் முட்புதரில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை யாரோ ஒருவர் வீசிச் சென்றுள்ளனர். குழந்தையின் அழுகுரல் சத்தத்தை கேட்டு அதனை கண்ட துப்புரவு ஊழியர்கள் இதுகுறித்து அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அஞ்செட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் அசோக்குமார், கிராம சுகாதார செவிலியர் சாந்தா ஆகியோர் ஆண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குழந்தை உயிருடன் நலமாக இருப்பதாகவும் மேல் சிகிச்சைக்கு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்வதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.