தமிழ்நாடு
சென்னையில் புதிய விமான நிலையம்: மத்திய அமைச்சர் தகவல்
சென்னையில் புதிய விமான நிலையம்: மத்திய அமைச்சர் தகவல்
சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வழங்கவுள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அவர் சென்னையில் தெரிவித்தார். கோவை மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.