‘தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

‘தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தந்தைப் பெரியார் பெயரால் அமைக்கப்பட்ட 240 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும், புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் அறிவித்த மு.க.ஸ்டாலின், “ ஏற்றத்தாழ்வை இடித்து, சமூகத்தை சமப்படுத்த போராடிய தந்தை பெரியார் பெயரால் 240 சமத்துவபுரங்களை கட்டினார் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. அந்த சமத்துவ புரங்கள் சரியாக பராமரிக்கப்படாத அவல நிலையில் இப்போது இருக்கின்றன. அந்த சமத்துவபுரங்கள் உடனடியாக சீரமைக்கப்படும். அதுமட்டுமல்ல. தமிழகத்தில் மேலும் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்” என தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com