நெல்லை: ஆபத்தான வகையில் பைக் சாகசத்தில்ஈடுபடும் இளைஞர்கள்! சாதி உணர்வை தூண்டும்வகையில் வீடியோ பதிவு!

வள்ளியூர் பகுதிகளில் சாதி உணர்வை தூண்டும் வகையிலும் பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவு செய்து வரும் இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Bike adventure
Bike adventurept desk

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை பகுதிகளில் அஜாக்கிரதையாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாதிய உணர்வை தூண்டும் வகையிலும் அதனை சமூக வலைதளங்களில் கெத்தாக பதிவிட்டும் வருகின்றனர்.

Reels
Reelspt desk

ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வருகிறது. இந்நிலையில், இளைஞர்கள் இதுபோன்ற வீடியோக்களை எடுத்து சமுக வலைதளங்களில் வெளியிட்டு வருவது மிகவும் ஆபத்தானது என பொதுமக்கள் எச்சரித்து வருகின்றனர்.

Bike adventure
மகாராஷ்டிரா| பழகும் போது காரை ரிவர்ஸ் எடுத்த இளம்பெண்.. மலையில் இருந்து விழுந்து பலி.. #ViralVideo

மேலும் ஆபத்தான முறையில் பைக் வீலிங்கில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அந்த இளைஞர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com