\
கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த இசக்கிமுத்துவும் உயிரிழப்பு

கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த இசக்கிமுத்துவும் உயிரிழப்பு

கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த இசக்கிமுத்துவும் உயிரிழப்பு
Published on: 

கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிமுத்துவும் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

கந்துவட்டி கொடுமை காரணமாக தென்காசி அருகே காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, இரண்டு பெண் குழந்தைகளும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் (அக்.,23) தீக்குளித்தனர். ‌காயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமியும், அவரது மகள்கள் இருவரும் அடுத்தடுத்து 23-ஆம் தேதியே உயிரிழந்தனர். சுப்புலட்‌சுமி மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன. தீக்காயங்களுடன் இசக்கிமுத்து மட்டும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இசக்கிமுத்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கந்துவட்டி கொடுமைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 உயிர்கள் பறிபோயுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com