நெல்லை: மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டு தீ பிடித்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

நெல்லை: மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டு தீ பிடித்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

நெல்லை: மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டு தீ பிடித்த விபத்தில் இருவர் உயிரிழப்பு
Published on

நெல்லை மாவட்டம் இடைகால் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தீ பிடித்தில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள கபாலிபாறை பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (எ) துரை ( 41). கூலித்தொழிலாளியான இவர், நேற்று இரவு தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் தனது சொந்த ஊரான கபாலிபாறை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (எ) சேகர் (45) தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் அம்பாசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இடைகால் அருகேயுள்ள பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக இருவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் வெளியாகி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அப்போது மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த துரையும் தற்போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com