தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமா நதி ஆகிய அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் தாமிரபரணி ஆறு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நெல்லை சந்திப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளான மீனாட்சிபுரம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

வெள்ளப்பெருக்கால், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நெல்லை திருச்செந்தூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் வசவப்பபுரம் வழியாக திருப்பிவிட்டுள்ளன.

தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க வரும் 17ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழைநீடிப்பதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கருப்பையாற்றுக்கு வரும் தண்ணீரை மணல் மூட்டைகளை வைத்து குளங்களுக்குத் திருப்பி விடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் சிவகிரி, உள்ளார், ராயகிரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பிலாள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com