நெல்லை: தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

நெல்லை: தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
நெல்லை: தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை பெய்தது.

இந்நிலையில், நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்மழை பெய்த நிலையில், மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக பிரதான அணைகள் முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில், அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கன மழையினால் ஏற்பட்டுள்ள காற்றாற்று வெள்ளம் மற்றும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் உள்ளிட்டவைகள் காரணமாக தாமிரபரணி ஆற்றில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் மறு உத்தரவு வரும் வரை குளிக்கவும் வேடிக்கை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கும் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com