\
மணல் கொள்ளையர்களின் அட்டூழியம் : காவலர் அடித்துக்கொலை!

மணல் கொள்ளையர்களின் அட்டூழியம் : காவலர் அடித்துக்கொலை!

மணல் கொள்ளையர்களின் அட்டூழியம் : காவலர் அடித்துக்கொலை!
Published on

நெல்லையில் மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீஷ் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள விஜயநாராயணம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ். நேற்றிரவு நம்பியாற்றில் சில மணல்கொள்ளையர்கள், மணலை அள்ளிச்செல்வதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து மணல் கொள்ளையர்களை தடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார் ஜெகதீஷ். இந்நிலையில், அதிகாலை நேரத்தில் ஜெகதீஷ் கம்பியால் தாக்கியும், தலையில் அடித்தும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையை மணல் கொள்ளையர்கள் தான் செய்திருப்பார்கள் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், மணல் கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற காவலரே அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com