\
லாரி டிரைவரிடம் ரூ.50 லஞ்சம் : வீடியோவால் சஸ்பெண்ட் ஆன காவலர்..!

லாரி டிரைவரிடம் ரூ.50 லஞ்சம் : வீடியோவால் சஸ்பெண்ட் ஆன காவலர்..!

லாரி டிரைவரிடம் ரூ.50 லஞ்சம் : வீடியோவால் சஸ்பெண்ட் ஆன காவலர்..!
Published on

நெல்லையில் லாரி டிரைவரிடம் ரூ.50 லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நெல்லை மாநகர் ஆயுதப்படையின் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர் செல்வகுமார். இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று இரவு ராணி அண்ணா கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி டிரைவர் சபாபதி என்பவரை மிரட்டி ரூ.50 லஞ்சம் பெற்றதாக வீடியோ வெளியானது.

இந்நிலையில் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோர், காவலர் செல்வகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com