நெல்லை: ஒருதலை காதல்... தவறி விழுந்த அரிவாள் வெட்டில் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

நெல்லை: ஒருதலை காதல்... தவறி விழுந்த அரிவாள் வெட்டில் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
நெல்லை: ஒருதலை காதல்... தவறி விழுந்த அரிவாள் வெட்டில் 8 மாத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மகிழடியில் ஒருதலை காதல் விவகாரத்தில், தவறி விழுந்த அரிவாள் வெட்டால் 8 மாத குழந்தை உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ஏஞ்சலின் நல்லதாம் - ஆனந்த் செலின் தம்பதியினர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது 8 மாத குழந்தையை (அக்சயா குயின்) அவரது பெற்றோர்கள் ரசல்ராஜ் - எப்சிபாய் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளனர். தாத்தா பாட்டி அரவணைப்பில் அக்சயா குயின் வளர்ந்து வந்துள்ளார்.

ரசல்ராஜ் - எப்சிபாய்க்கு நான்கு பெண்கள் உள்ளனர். கடைசி மகள் ஏஞ்சல் பிளசி நர்சிங் முடித்து கோவையில் பணியாற்றி வருகிறார். இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சட்டம் படித்துள்ள சிவசங்கரன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிலதினங்களுக்கு முன்பு சிவசங்கரன் மகிழடியில் உள்ள ரசல்ராஜ் வீட்டிற்குச் சென்று ஏஞ்சல் பிளசியை திருமணம் செய்ய பெண் கேட்டதாக கூறப்படுகிறது. சிவசங்கரன் இந்துவாக இருப்பதால் ரசல்ராஜ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிவசங்கரன், ரசல்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ரசல்ராஜ் வாக்கிங் சென்று விட்டதாகவும், எப்சிபாய், அவரது கடைசி பெண் மற்றும் குழந்தை அக்சயா குயின் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அரிவாளுடன் வீட்டின் உள்ளே நுழைந்த சிவசங்கரன் எப்சிபாயை வெட்ட முயன்றுள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அக்சயா குயின் மீது வெட்டு விழுந்துள்ளது. இதில் குழந்தை அக்சயா குயின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மேலும் எப்சிபாயையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதையடுத்து கடைசி பெண் மற்றொரு ரூமுக்குள் சென்று பூட்டிக் கொண்டதால் தப்பினார். சப்தம் கேட்டு வாக்கிங் சென்ற ரசல்ராஜ் வீட்டுக்கு வந்தார். அவரையும் சிவசங்கரன் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில், சிவசங்கரனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ரசல்ராஜ், அவர் மனைவி எப்சிபாய் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எப்சிபாய் படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். தகவலறிந்து அங்கு வந்த களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com