Nellai Marathon 2024
Nellai Marathon 2024PT

புதிய தலைமுறை, தி பெடரல் இணைந்து நடத்திய நெல்லை மாரத்தான்: ஆரோக்கிய விழிப்புணர்வு

நெல்லை மாரத்தானில் ஆரோக்கிய விழிப்புணர்வு - 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Published on

புதிய தலைமுறை, தி பெடரல் மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் இணைத்து நடத்திய நெல்லை மாரத்தானில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை அண்ணா மைதானத்தில் மாரத்தான் நடைபெற்றது. ஆண்கள் பிரிவுக்கான மாரத்தான் போட்டியை, SCAD கல்வி குழுமத்தின் பொது மேலாளர் திரு. கிருஷ்ணகுமார், LITLLE FLOWER PUBLIC SCHOOL - ன் தாளாளர் திரு. செல்வகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெண்கள் பிரிவுக்கான மாரத்தான் போட்டியை, NIMS பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பிரிந்த மற்றும் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் நிர்வாக அதிகாரி ஜான் கென்னடி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. 10 கிலோமீட்டர் பிரிவில் பசுபதியும் 5 கிலோமீட்டர் பிரிவில் சௌமியாயும் முதல் பரிசு பெற்றனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நெல்லை தினமலர் நிர்வாக இயக்குனர் திரு தினேஷ், RMR இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திரு. சின்ன வேல்ராஜ், LEAF SOLAR நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. முருகன், ஸ்பெக்ட்ரா நீட் அகாடெமியின் தலைவர் திரு. சொக்கலிங்கம், பாளையம்கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரோக்கியத்தின் அவசியத்தையும் அனைவரும் புரிந்து கொண்டு உடலை பேனிக் காக்க வேண்டும் என்பதற்காக மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com