\
நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை நீதிமன்றம் உத்தரவு

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை நீதிமன்றம் உத்தரவு

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை நீதிமன்றம் உத்தரவு
Published on

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நெல்லை கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அதனால் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் கோரி நெல்லை கண்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com