பிரதமர், அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக புகார்: நெல்லை கண்ணன் கைது
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆளுநரிடமும் புகார் அளித்தனர்.
அத்துடன், நெல்லைக் கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தலைவர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் சிறிது நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.