தமிழ்நாடு
மருத்துவர்கள் விடுப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் கடும் சிரமம்
மருத்துவர்கள் விடுப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் கடும் சிரமம்
வள்ளியூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரு தினங்களாக மருத்துவர் வராததால் கர்ப்பிணிகள் உள்ளிட்ட நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனை நம்பி 20க்கும் அதிகமான கிராம மக்கள் உள்ளனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரு நாட்களாக மருத்துவர்கள் வராததால் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் திண்டாடி வருகிறார்கள்.
வருவோருக்கு செவிலியர்களே மருந்து தருவதாகவும் நோயாளிகள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, இருதினங்களாக மருத்துவர் விடுப்பில் இருப்பதாகவும், அவரது விடுப்பு ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.