முன்னாள் மேயர் கொலை வழக்கு : 25 சவரன் நகைகள் பறிமுதல்

முன்னாள் மேயர் கொலை வழக்கு : 25 சவரன் நகைகள் பறிமுதல்

முன்னாள் மேயர் கொலை வழக்கு : 25 சவரன் நகைகள் பறிமுதல்
Published on

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை ரெட்டியார்பட்டியில் வசித்துவந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23ஆம் தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் ஆவார்.

இந்நிலையில் கொலை நடந்த வீட்டில் இருந்து திருடப்பட்ட 25 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கார்த்திகேயனிடம் இருந்து இந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com