ஆர்ப்பரித்துக் கொட்டும் மணிமுத்தாறு அருவி
ஆர்ப்பரித்துக் கொட்டும் மணிமுத்தாறு அருவிpt desk

நெல்லை | தொடரும் கனமழை... ஆர்ப்பரித்துக் கொட்டும் மணிமுத்தாறு அருவி - குளிக்கத் தடை

தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக தடை வனத்துறை தடை விதித்துள்ளது.
Published on

செய்தியாளர்: இ.முத்துப்பாண்டியன்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டும் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

ஆர்ப்பரித்துக் கொட்டும் மணிமுத்தாறு அருவி
புதுக்கோட்டை | கோயில் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..!

தோடர்ந்த அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 3வது நாட்களாக வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து குறைந்த பின்பே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com