தமிழ்நாடு
தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் நஷ்டம்: விவசாயிகள் ஆதங்கம்
தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் நஷ்டம்: விவசாயிகள் ஆதங்கம்
தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாக நெல்லை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்களால் பெரும் இழப்பு ஏற்படுவதாக நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 15 நாட்களுக்கு ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை மருந்து பயன்படுத்த வேண்டியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். அனைத்து கடைகளிலும் தரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.