தமிழ்நாடு
பாதுகாப்பு உபகரணங்கள் தர மறுப்பது ஏன்..? என்று தீரும் இந்த அவலம்..?
பாதுகாப்பு உபகரணங்கள் தர மறுப்பது ஏன்..? என்று தீரும் இந்த அவலம்..?
நெல்லை வண்ணாரபேட்டையில் கழிவுநீர் ஓடையை வெறும் கைகளால் சுத்தபடுத்தும் துப்புரவு பணியாளர்களின் பரிதாப நிலையை மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் துப்புரவு பணியை மேற்கொள்வதாகவும், ஆனால் அதற்காக கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே, உச்சநீதிமன்றம் உத்தரவை மீறி சில பகுதிகளில் பாதாள சாக்கடைகளில் நேரடியாக பணியாளர்கள் வேலை செய்ய நிர்பந்தம் செய்யப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நடப்பு ஆண்டு சுதந்திர தினத்தின்போது சிறந்த மாநகராட்சிக்கான விருதை பெற்ற நெல்லை மாநகராட்சியில் இந்த அவலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.