சிபிஎம் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்
சிபிஎம் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்pt desk

நெல்லை: சாதி மறுப்பு திருமணம் - சிபிஎம் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியினர் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் அக்கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கினர்.

திருநெல்வேலியை சேர்ந்த உதய தாட்சாயினி மற்றும் மதன் குமார் ஆகிய இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

சாதி மறுப்பு திருமணம்
சாதி மறுப்பு திருமணம்pt desk

தகவல் அறிந்து கட்சி அலுவலகத்துக்கு வந்த பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி அலுவலகத்தின் கண்ணாடி, இருக்கைகள், கதவு என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டது.

சிபிஎம் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்
ஜாமீனில் வெளியே வந்து 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி பீகாரில் கைது

இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட எட்டு பேரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com