\
நெல்லை: குட்டியுடன் குடியிருப்பு பகுதிகளில் வலம்வந்த கரடிகள்

நெல்லை: குட்டியுடன் குடியிருப்பு பகுதிகளில் வலம்வந்த கரடிகள்

நெல்லை: குட்டியுடன் குடியிருப்பு பகுதிகளில் வலம்வந்த கரடிகள்
Published on

குடியிருப்பு பகுதிக்கு அருகே குட்டியுடன் வலம் வந்த கரடிகளை வனத்துறையினர் விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுப்புற மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் உள்ள திருப்பதியாபுரம், வேம்பையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

இந்நிலையில் மணிமுத்தாறு அருகே குடியிருப்பு பகுதி அருகே இரு குட்டிகளுடன் கரடி வலம் வந்தது. இதையடுத்து அந்த கரடியை வெடி வெடித்தும் சப்தம் எழுப்பியும் வனத்துறையினர் விரட்டியுள்ளனர். இந்த நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com