நெல்லை: குரல் கொடுத்தால் கூட்டமாக வரும் பருந்துகள்.. உணவளித்து மகிழும் தம்பதி!

நெல்லை: குரல் கொடுத்தால் கூட்டமாக வரும் பருந்துகள்.. உணவளித்து மகிழும் தம்பதி!
நெல்லை: குரல் கொடுத்தால் கூட்டமாக வரும் பருந்துகள்.. உணவளித்து மகிழும் தம்பதி!

நெல்லையில் வளர்ப்புப் பிராணிகளுக்கு உணவளிப்பதுபோல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பருந்துகளுக்கு தம்பதியினர் உணவளித்து வருகின்றனர்

நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் சுதர்சனம் (74) இவர், வேளாண் விற்பனைத் துறையில் விற்பனை கூட கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது பிள்ளைகள் வெளி ஊரில் வசித்து வரும் நிலையில் இவர் தன் மனைவியுடன் வசித்து வருகின்றார்.


இந்நிலையில் தம்பதிகள் இருவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களது வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்த்து வருகின்றனர், தெருவில் ஆதரவற்று இருக்கும் நாய்களை மீட்டு தனது வீட்டில் இடம் கொடுத்து வளர்த்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய சுதர்சனம், ''பிறகுக்கு கொடுப்பதிலே மன நிறைவு இருக்கிறது. இந்த உலகத்தில் முதல் கொடுமையே பசி கொடுமை தான், இந்த பசியின் கொடுமையை உணர்ந்ததாலேயே கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட நாய், பூனைகளுக்கு சோறு மற்றும் இறைச்சி கழிவுகள் போன்ற உணவுகளை கொடுத்து வருகிறோம். நாய், பூனைக்கு உணவளிப்பது போல் பருந்துகளுக்கும் உணவு வழங்குகிறோம்’’ என்றார்


இதற்காக இவர், தினமும் இறைச்சி கடைகளுக்கு சென்று இறைச்சி கழிவுகளை வாங்கி மதியம் 2 மணிக்கு வீட்டு வாசலில் வந்து நின்று சத்தமிட்டதும் வட்டமிட்டு வருகிறது 100க்கும் மேற்பட்ட பருந்துகள், கீழிலிந்து தூக்கி எறியப்படும் இறைச்சியை குறி வைத்து பிடித்து பருந்துகள் உண்ணுகின்றன. அதேபோல் வீட்டிற்கு வெளியே மாடுகளுக்கு தண்ணீர் தொட்டி கட்டி தாகம் தீர்த்து வருகின்றனர்.

பலரின் எதிர்ப்பிற்கு நடுவே ஆதரவற்ற விலங்குகளுக்கு தங்களது வீட்டில் ஆதரவு கொடுத்து உணவளித்து வரும் இந்த தம்பதியினர், பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் போது செய்துவிட்டால் அதில் கிடைக்கும் மன நிம்மதிக்கு அளவில்லை என்கின்றனர் நம்பிக்கையாக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com