\
நெல்லை : குலைதள்ளிய ஒரு அடி உயர வாழைமரம்!!

நெல்லை : குலைதள்ளிய ஒரு அடி உயர வாழைமரம்!!

நெல்லை : குலைதள்ளிய ஒரு அடி உயர வாழைமரம்!!
Published on

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கடம்பன்குளம் தோட்டத்தில் ஒரே ஒரு அடி உயரம் கொண்ட ஒரு வாழைக்கன்றில் விசித்திரமாக வாழை குலைதள்ளி உள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கடம்பன் குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை சாகுபடி செய்து வருகிறார். அருகாமையில் உள்ள விவசாயிகள் இவரது தோட்டத்தில் இருந்து வாழைக் கன்றுகளை விலைக்கு வாங்கி சாகுபடி செய்வது வழக்கம்.

இவருக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து வாழைக் கன்றுகளை வாங்க, அதேப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த வாழைக்கன்றுகளில் ஒரு அடி உயரம் கொண்ட வாழைக்கன்று சிறிய குலை தள்ளி இருப்பதை கண்டுள்ளார். இதை ஆர்வமுடன் பார்த்த அவர் அந்த வாழைக்கன்றை பாதுகாப்பாக எடுத்துச்சென்று தோட்ட உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.

இதனை அப்பகுதியைச் சார்ந்தவர்களும் இதர விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த ஆச்சர்யத்துடன் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com