புதிய தலைமுறை செய்தி எதிரொலி: ஆவடியில் மீண்டும் துவங்கியது போலீசாரின் சைக்கிள் கண்காணிப்பு பணி!
செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆவடி காவல் ஆணையராக இருந்த சந்திப்ராய் ரத்தோர் சமூகக்காவல் திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களுடன் இணைந்து அக்கம் பக்கத்தினரை கண்காணிக்கும் வகையில் Neighbor Watch Scheme கொண்டு வந்தார். இதன் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 4 சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதில். 4 காவலர்கள் சைக்கிளில் ரோந்து சென்று நேரடியாக குடியிருப்புவாசிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வந்தனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் இருந்தது.
இந்நிலையில், அடுத்தடுத்து ஆணையர்கள் மாறியதால் எந்த காவல் நிலையத்திலும் இந்த திட்டம் செயபடுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. அந்த காவல் நிலையங்களில் பராமரிப்பின்றி சைக்கில்கள் நிறுத்தப்பட்டு துருப்பிடித்துப் பிடித்துப் போனது.
மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இதையடுத்து கிடப்பில் போடப்பட்ட Neighbor Watch Scheme மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
புதிய தலைமுறை செய்தி வாயிலாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் கவனம் பெற்றதைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செயலற்று இருந்து சைக்கிள்கள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.