”அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல” வைரமுத்து ட்வீட்

”அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல” வைரமுத்து ட்வீட்

”அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல” வைரமுத்து ட்வீட்
Published on

அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம். தற்கொலை என்பது தீர்வுமல்ல என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்

நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜோதி ஸ்ரீ துர்கா, தான் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாணவியின் தற்கொலை குறித்து தங்களது இரங்கலையும், தற்கொலை தீர்வல்ல என்ற கருத்தினையும் தெரிவித்து வருகிறார்கள்.

 இந்நிலையில், கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பதிவில் “ஓ! மாணவ மகன்களே! மகள்களே! நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல. பிறக்கும் யாருக்கும் தங்களை அழிக்கும் உரிமை இல்லை. அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம். நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.”  என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com