\
நீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது

நீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது

நீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது
Published on

நீட் தேர்வு முறைகேடு வழக்கில், மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 4 மாணவர்களும் அவர்களின் தந்தைகளும்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் பிரியங்கா என்ற மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அந்த மாணவி, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது உறுதியான நிலையில், அவரை தேனி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதனிடையே மாணவி பயின்ற மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com