‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு

‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு
‘புகைப்படம் மாறியுள்ளதாக அப்போதே சொன்னோம்’ - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகன் மனு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய தந்தை, மகன் இருவரின் மனுக்களை வருகிற 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரஷிகாந்த் இருவரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், “நான் ரசாயன கம்பெனி ஒன்றின் தலைவராக பொறுப்பிலிருக்கும் நிலையில், எனது மகன் தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில்வதற்கான சேர்ந்தார். இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி வழக்குப் பதிவு செய்து என்னையும் எனது மகனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாங்கள் இல்லாத நேரத்தில் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். 

நீட் தேர்வில் அதுபோன்ற ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை. ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த போது அந்தப் புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது. இது தொடர்பாக அதிகாரிகளை அணுகிய போது ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால் தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும் எனது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் எங்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தபோது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனவே இந்த வழக்கில் எனக்கும் எனது மகனுக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக மனுதாரர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. எனவே வழக்கை வருகிற 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com