நீட் தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா..? கீழே விவரங்கள்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாக இருக்கும் நிலையில், அதில் மாணவர்களுக்கு எழும் பொதுவான சந்தேகங்களையும், அதற்கான விளக்கங்களையும் பார்க்கலாம்.
கேள்வி 1: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமா?
பதில் 1: நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயமல்ல என்ற உச்சநீதிமன்ற உத்தரவு வந்திருப்பதால், ஆதார் தகவல்கள் இல்லாமலேயே விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு எண் போன்றவற்றை அடையாளச் சான்றாக வழங்கலாம்.
கேள்வி 2: கிரீமி லேயர், நான்- கிரீமி லேயர் என்றால் என்ன?
பதில் 2: ஓ.பி.சி. பிரிவில் 6 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் கிரீமி லேயரை சேர்வார்கள். 6 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் பெறுபவர்கள் நான் கிரீமி லேயர் பிரிவில் வருவார்கள்.
கேள்வி 3: விண்ணப்பிக்கும் போது எவற்றை எல்லாம் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்?
பதில் 3: 10 KB முதல் 100 KB அளவுள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 3 KB முதல் 10KB அளவுள்ள கையெழுத்தின் புகைப்படத்தை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த முறையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கு அவசியமானவற்றைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்
கேள்வி 4: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய நேர அளவு உள்ளதா?
பதில் 4: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய 30 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. STEP 1, STEP 2 என ஒவ்வொரு நிலையாக பூர்த்தி செய்தல் நலம்