\
பணப்பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை தேவை: தமிழிசை

பணப்பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை தேவை: தமிழிசை

பணப்பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை தேவை: தமிழிசை
Published on

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவினர் பெருமளவு முறைகேட்டில் ஈடுபடுவதாக, பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

பாரதிய ஜனதா வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தண்டையார்பேட்டை மற்றும் வ உ.சி. நகர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். வாகனத்தில் இருந்தவாறே வேட்பாளர் கங்கை அமரனுடன் இணைந்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது நேரடிப் பார்வையில் ஆர்.கே நகர் தொகுதி எப்படி இருந்ததோ, அதே போல் பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றால் பிரதமரின் நேரடிப் பார்வையில் இருக்கும் எனக் கூறினார். பின்னர் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் மேலும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com