தமிழ்நாடு
தமிழக உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலின் தலைமை தேவை..!
தமிழக உரிமைகளை மீட்டெடுக்க ஸ்டாலின் தலைமை தேவை..!
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலினின் தலைமை தேவை என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலினின் தலைமை தேவை என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் ஸ்டாலினின் பதவி உயர்வு அதிர்ஷ்டத்தால் கிடைக்கவில்லை எனவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.