விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக - வைகோ தேர்தல் அறிக்கை

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக - வைகோ தேர்தல் அறிக்கை
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக - வைகோ தேர்தல் அறிக்கை

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் வெளியிட்டார். அதில் நீட் தேர்வை ரத்து செய்யவும், பொருளாத ரீதியாக பாஜக அரசு வழங்கியுள்ள 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும், மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத நிதி ஆயோக் அமைப்பை கலைக்கவும் மதிமுக வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி உண்மையான கூட்டு ஆட்சியை நிலைப்பெற செய்யும் நோக்கில், இந்திய அரசியல் சாசனம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் எவ்வித பலனையும் தராத நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைய மதிமுக குரல் எழுப்பும் எனக் கூறப்பட்டுள்ளது. மேகதாது அணை, முல்லைப்பெரியாறு புதிய அணை திட்டங்களு‌க்கு எதிராகவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் மதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் வழியே கெயில் எரிவாயு குழாய் பதிப்பதையும், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதையும் மதிமுக தொடர்ந்து எதிர்க்கும் என கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ ஆய்வகம், ஹைட்ரோகார்பன், கூடங்குளம், சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து மதிமுக போராடும் என்றும் நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு ரயில்வே கோட்டம் அமைக்க வலியுறுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com