Minister L.Murugan
Minister L.Muruganpt desk

தமிழகத்திற்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை மோடியின் ஆன்மிக மாடல் ஆட்சியே தேவை - எல்.முருகன்

திராவிட மாடல் ஆட்சியின் தோல்வி காரணமாகவே வேங்கை வயல் பிரச்னையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டினார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டை பிள்ளையார் திடலில் சேலம் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சமூக நீதி வார கொண்டாட்டம் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர்...

L Murugan BJP MEET
L Murugan BJP MEETPT DESK

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு ஆட்சி பொற்கால ஆட்சி. இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக உலக தலைவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார். தமிழ்நாட்டில் 11 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரம் கீழ்நோக்கி செல்லும் நிலையில், உலக அளவில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. திராவிட மாடல் சமூக நீதி என்றால் என்ன? சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் பட்டியலின அமைச்சர்களுக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் முதலமைச்சருக்கு அடுத்த முக்கியத் துறைகள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. திராவிட மாடலை குப்பையில் தான் போட வேண்டும், திராவிட மாடல் ஆட்சியின் தோல்வி காரணமாகவே வேங்கை வயல் பிரச்னையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

தமிழகத்திற்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை பிரதமர் மோடியின் ஆன்மிக மாடல் ஆட்சியே தேவையென அமைச்சர் எல்,முருகன் பேசினார். இக்கூட்டத்தின் முடிவில் மத்திய இணை அமைச்சர் மேடையில் அமர்ந்திருந்த போது திரைப்பட நடிகர் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் வரும் உலக நாயகனே என்ற பாடலுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் எல்,முருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் படத்தை காண்பித்தபடி ஆட்டம்போட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com