முத்துகிருஷ்ணன் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: தந்தை ஜீவானந்தம்

முத்துகிருஷ்ணன் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: தந்தை ஜீவானந்தம்

முத்துகிருஷ்ணன் மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: தந்தை ஜீவானந்தம்
Published on

முத்துகிருஷ்ணன் மரணத்தில் மர்மம் உள்ளதால், அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை ஜீவானந்தம் வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் எம்.பில் படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென மர்மமான முறையில் அவரது நண்பர் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். முத்துகிருஷ்ணன், தூக்கில் தொங்கியபடி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

முத்துகிருஷ்ணன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், தனது மகன் அறிவுள்ளவர். கோழையல்ல. தற்கொலை செய்திருக்க மாட்டார் என கூறினார்.

மேலும் முத்துகிருஷ்ணன் உடலை வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், அப்போது தங்கள் தரப்பு மருத்துவரும் இருக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முத்துகிருஷ்ணன் மரணத்தில் மர்மம் உள்ளதால், அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது உடலை வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com