மாணவர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை: பள்ளிகளுக்கு சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல்

மாணவர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை: பள்ளிகளுக்கு சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல்
மாணவர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை: பள்ளிகளுக்கு சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல்

பள்ளிகள் தொடங்கும் போது மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட பள்ளி நிர்வாகங்களை, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களை தொற்று நோய் பாதிக்காத வகையில்‌ சுற்றுச் சூழல் நன்றாக உள்ளது என்பதையும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மின்கசிவு ஏதுமில்லை என்பதையும் உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி சான்றளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமான சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகள் தொடங்கும் போது, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையுடன் பள்ளி நிர்வாகங்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com