ஸ்டெர்லைட் போராட்டத்தில் நக்சல் ஊடுருவல்: அர்ஜூன் சம்பத்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நக்சல் ஊடுருவல்: அர்ஜூன் சம்பத்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நக்சல் ஊடுருவல்: அர்ஜூன் சம்பத்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நக்சல் ஊடுருவியிருப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை, அதன் விரிவாக்கப் பணிகள் ஈடுபட்டுள்ளது. இதற்கு தடைவிதிக்கக்கோரி தூத்துக்குடியில் ஒரு கிராமமே அமைதியான முறையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள்தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கிராம மக்கள் மரத்தடி நிழலில் அமைதியான முறையில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நக்சல் ஊடுருவியிருப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். எனவே இதுதொடர்பாக காவல்துறை தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com