நவராத்திரி விழா: தனலட்சுமி அம்மனுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

நவராத்திரி விழா: தனலட்சுமி அம்மனுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

நவராத்திரி விழா: தனலட்சுமி அம்மனுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
Published on

நவராத்திரியை முன்னிட்டு 30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு ஸ்ரீ தனலட்சுமி அம்மன் அலங்காரிக்கப்பட்டார்.

நவராத்திரியை முன்னிட்டு வீடுகளிலும், கோவில்களிலும் நவராத்திரி கொலு வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறத. இதனிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 4 ஆம் நாளான இன்று ஸ்ரீ தனலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், சுமார் 30 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com